அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மார்க் ஆண்டனி - எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதிலாக நடிக்க வேண்டியவர் இவரா?

மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் நடிக்க வேண்டிய நடிகர் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :22 செப்டம்பர் 2023, 7:08 am

DIN

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இப்படம் வெளியான 5 நாள்களில் உலகளவில் ரூ.62.11 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜாக்கி பாண்டியன், மதன் பாண்டியன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், முதலில் மதன் பாண்டியனாக நடிக்க பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை அணுகலாம் என ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்திருந்திருக்கிறார். ஆனால், மதன் கதாபாத்திரத்திலும் நானே நடிக்கிறேன் என எஸ்.ஜே.சூர்யா முன் வந்ததால் முடிவை மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமானார். அடுத்ததாக, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘மகாராஜா’ படத்திலும் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.