
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி அடுத்ததாக, ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்.
மேலும், இதில் ரஜினிக்கு வில்லனாக ஃபஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ராணாவும் நடிகை துஷாரா விஜயனும் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு ‘வேட்டை’ எனப் பெயரிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: மார்க் ஆண்டனி - எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதிலாக நடிக்க வேண்டியவர் இவரா?
இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் கன்னியாகுமரி, நாகர்கோயில் பகுதிகளில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாமதமாகி அக்டோபர் இறுதியில் துவங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...