
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் மீண்டும் துவங்கியுள்ளது. இதில், சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.
இதையும் படிக்க: இது கேவலமான செயல்: சாய் பல்லவி
சிறுமலையில் தொடர்ந்து பெய்யும் மழையால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி எடுக்க முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
மேலும், இப்பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், படப்பிடிப்பில் நடிகர் தினேஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் கலந்துகொண்டு புகைப்படம் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...