
ஜெயிலர் படத்தில் இருந்து ஹுக்கும் பாடலின் விடியோவை யூடியூபில் படக்குழுவினர் திங்கள்கிழமை காலை வெளியிட்டனர்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.
இந்த படம், மொத்தம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இதன்மூலம், 2.0 படத்துக்கு பிறகு ரூ. 500 கோடி வசூலைக் கடந்த ரஜினியின் படமாக ஜெயிலர் சாதனை படைத்தது.
இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதே போல் படத்தின் இயக்குநரான நெல்சன், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் கார் ஒன்றை வழங்கினார்.
இந்த நிலையில் ஹுக்கும் பாடலில் முழு விடியோ பாடல் யூடியூபில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, காவாலா பாடலின் விடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...