நாயகியாக அறிமுகமானார் சல்மான் கானின் தங்கை மகள்!

பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானின் தங்கை மகள் கதாநாயகியாக நடித்துள்ள படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 
நாயகியாக அறிமுகமானார் சல்மான் கானின் தங்கை மகள்!

ஹிந்தியில் பிரபலமான நடிகர் சல்மான் கான். இவருக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். ஒருவர் அல்விரா கான் அக்னிஹோத்ரி. இன்னொருவர் அர்பிடா கான். சிறு வயதில் விபத்து ஒன்றில் இறந்து கிடந்த குழந்தையை சல்மான் கானின் பெற்றோர்கள் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். 

இந்நிலையில் மூத்த சகோதரியின் மகள் அலீஜா நாயகியாக நடித்துள்ள படம்தான் ஃபர்ரே. இந்தப் படத்தினை சல்மான் கான் ஃபிலிம்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், ரியல் லைஃப் புரடக்‌ஷன்  இணைந்து இந்தப் படத்தினை தயாரித்துள்ளார்கள்.

ஜம்ட்ரா என்ற படத்தினை இயக்கிய சௌமேந்திர பதி இயக்கியுள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. 2016இல் சௌமேந்திர பதி இயக்கிய பார்ன் டூ ரன் திரைப்படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் அம்பானியின் குடும்ப விழாவில் அலீஜாவும் பங்கேற்றிருந்தார். மேலும் சமீபத்தில் அலீஜாவின் பிறந்தநாளில் சல்மான் கான் வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் நடிகர் சல்மான் கான் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.  இந்தப் படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகுமெனவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com