தோனியின் சாதனை முறியடிப்பு: அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த இம்ரான் தாஹிர்!
By DIN | Published On : 25th September 2023 04:20 PM | Last Updated : 25th September 2023 04:20 PM | அ+அ அ- |

ஜிஏடபிள்யூ (கயானா அமேசான் வாரியர்ஸ்) அணிக்கு 44 வயதான இம்ரான் தாஹிர் கேப்டனாக செயல்பட்டு வந்தார். சிபிஎல்லின் இறுதி போட்டி ஜிஏடபிள்யூ அணியும் பொல்லார்டின் டிகேஆர் (டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்) அணியும் மோதின.
முதலில் பேட்டிங் ஆடிய டிகேஆர் அணி 18.1 ஓவர்களில் 94 ரன்களுக்குள் சுருண்டது. கேஸ் கார்டி மட்டும் 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ட்வையின் ப்ரிடோரியஸ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்து ஆடிய அமேசான் வாரியர்ஸ் அணி 14 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: அக்ஷர் படேல் விலகல்: 3வது ஒருநாள் போட்டியில் இளம் வீரர்களுக்கு ஓய்வு!
Dwaine Pretorius bowls the Amazon Warriors to their first CPL title#CPL23 #CPLFinal #TKRvGAW #CricketPlayedLouder #BiggestPartyInSport #iflycaribbean pic.twitter.com/g5qKRspyzH
— CPL T20 (@CPL) September 25, 2023
5 முறை இறுதிப் போட்டிக்கு சென்ற அமேசான் வாரியர்ஸ் அணி முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது. 10 வருட காத்திருப்பு நிறைவேறியுள்ளது. இம்ரான் தாஹிர் இந்த அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யும்போது பலரும் அவரை கிண்டல் செய்தனர். ஆனால் அஸ்வின் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதையும் படிக்க: 3000 சிக்ஸர்கள் விளாசிய முதல் அணி இந்தியா: மற்ற அணிகளின் சிக்ஸர்கள் எண்ணிக்கை என்ன தெரியுமா?
போட்டி முடிந்தப் பிறகு இம்ரான் தாஹிர், “நான் கேப்டனாக பொருப்பேற்கும்போது பலரும் என்னை கிண்டல் செய்தனர். அது என்னை மேலும் ஊக்கப்படுத்துவதக இருந்தது. அவர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ஆனால் அப்போதே அஸ்வின் எனக்கு ஆதர்வாக பேசினார். இந்த அணி நிச்சயமாக கோப்பையை வெல்லும் என கூறினார். அவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிக்க: ரூ.1000 கோடி வசூலை கடந்த ஜவான் திரைப்படம்!
44 வயதில் கோப்பையை வென்ற முதல் வீரராகவும் இருக்கிறார் இம்ரான் தாஹிர். இதன் மூலம் தோனியின் (41 வயதில் ஐபிஎல் கோப்பை) சாதனையை முறியடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
TROPHY LIFT - A 10 year wait has finally come to an end... CONGRATULATIONS WARRIORS #CPL23 #CPLFinal #TKRVGAW#CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/qxS4nfQI7T
— CPL T20 (@CPL) September 25, 2023
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...