அக்ஷர் படேல் விலகல்: 3வது ஒருநாள் போட்டியில் இளம் வீரர்களுக்கு ஓய்வு!
By DIN | Published On : 25th September 2023 03:26 PM | Last Updated : 25th September 2023 03:26 PM | அ+அ அ- |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது போட்டியில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 399 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் பாதியிலேயே மழையால் பாதிக்கப்பட, ‘டக்வொா்த லீவிஸ்’ முறையில் 33 ஓவா்களில் 317 ரன்கள் அந்த அணிக்கு இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. அதில் ஆஸ்திரேலியா 28.2 ஓவா்களில் 217 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடா் இந்தியா வசமானது.
இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் அக்ஷர் படேல் விலகியுள்ளார். உடல்நிலை பொறுத்து விளையாடுவதாக இருந்தார். இந்நிலையில் காயம் முற்றிலும் குணமாகாததால் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இளம் வீரர்கள் 3வது போட்டியில் விளையாட மாட்டார்கள். அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு உள்ளது. உலகக் கோப்பையில் பங்கேற்கும் மூத்த வீரர்கள் இந்தப் போட்டியில் களமிறங்க உள்ளார்கள்.
3வது போட்டிக்கான அறிவிக்கப்பட்ட இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹார்திக் பாண்டியா (துணைக் கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஆர் அஸ்வின், அக்ஷர் படேல்*.
இதில் அக்ஷர் படேல் காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும் ஷுப்மன் கில், ஷர்துல் தாக்குருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...