
நடிகர் அஜித்துடன் சின்னத்திரை நடிகர் தீபக் எடுத்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்த தொடரில் தமிழ் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தீபக் தினகர். இவர் தொகுப்பாளரும் கூட. முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் அதிக ரசிகர்களைக் கவர்ந்தார்.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமாருடன் எடுத்துகொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "தல தரிசனம் என்பது வாழ்க்கையில் ஒரேமுறை நிகழும் நீல நிலவு. மிகவும் அடக்கமான நபர். சிறந்த நபருக்கான அடையாளம் நடிகர் அஜித் குமார்" எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அஜித்துடன் சேர்ந்து தீபக் நடிக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிக்க: விஜய்யுடன் மீண்டும் இணையும் அன்பறிவ்!
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தீபக், நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், அந்த நண்பருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...