துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர்.
விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்கிறார்.
இதற்கிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்ட அஜித் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமானதும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தும் அசத்துகிறார்.
இந்த நிலையில், நேற்று (ஏப்.1) நடிகர் அஜித், இருசக்கர வாகன நிறுவனத்தில் பணியாற்றும் ரசிகர்களைச் சந்தித்தார். அதில், சிலர் அவரிடம் கையொப்பம் பெற்றனர்.
அப்போது, அஜித் “சரியாக முட்டாள்கள் நாளன்று வந்திருக்கிறீர்களே” எனக் கிண்டலாகக் கூறினார். இதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர். தற்போது, இந்த விடியோ வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.












