இன்று டேர் டெவில் திரைப்பட பூஜை!
டேர் டெவில் பூஜை குறித்து...

நடிகர்கள் அஜித்குமார், பார்த்திபன்.
நடிகர் பார்த்திபன் டேர் டெவில் திரைப்படம் குறித்த அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’டேர் டெவில்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதில், நாயகியாக ஸ்ரீலீலாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் பார்த்திபன், பிரபு, சுனில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
டெர் டெவில் திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் பார்த்திபன், ’இன்று டேர் டெவில் நாள். மிகச் சிறந்தவரான அஜித்துடன் பணியாற்ற உள்ளது குஷியாக இருக்கிறது’ எனப் புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முடிந்து நவ. 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Actor Parthiban has shared an update regarding the film 'Daredevil'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


