அஜித் குமாருக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்?
ஏகே - 64 திரைப்படத்தில் கயாடு லோஹர்....

நடிகர்கள் அஜித்குமார், கயாடு லோஹர்
நடிகை கயாடு லோஹர் நடிகர் அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’டேர் டெவில்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை, பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நடிகை கயாடு லோஹரை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சில வெளிநாடுகளிலும் நடைபெற உள்ளது.
It has been reported that actress Kayadu Lohar has joined actor Ajith Kumar's film Daredevil.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


