கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டேர் டெவில் முக்கிய வில்லன் யார்?

டேர் டெவில் வில்லன் குறித்து...

நடிகர் அஜித் குமார்

Updated On :

நடிகர் அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படத்தின் வில்லன் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’டேர் டெவில்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதில், நாயகியாக ஸ்ரீலீலாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் பார்த்திபன், பிரபு, சுனில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

டேர் டெவில் திரைப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளார் ஷாலினி, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் பார்த்திபன், பிரபு, சுனில், உன்னி முகுந்தன் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் இப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இவர்தான் வில்லனாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் முக்கிய வில்லன் இல்லையாம்.

இதுகுறித்து பேசிய அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “டேர் டெவில் திரைப்படத்தின் முக்கிய வில்லனுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு கதாபாத்திரத்திற்கு நடிகர் உன்னி முகுந்தன் சரியான தேர்வாக இருப்பார் என அஜித் சார் சொன்னார். அக்கதாபாத்திரத்தில் உன்னி நடிக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்காக சில பாடல்களைத் தயார் செய்து வைத்திருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Discussions are underway regarding the villain for actor Ajith Kumar’s 'Dare devil' film.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER