ஜோக்கர் - 2 அப்டேட்!
ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.


இயக்குநர் டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் ‘ஜோக்கர்’.
ஆர்தர் (ஜாக்குவன் பீனிக்ஸ்) மேடை காமெடியனாகும் முயற்சியில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞன். ஆனால், ஒருகட்டத்தில் குடும்பமும் சமூகமும் அவனை எப்படி மனநோயாளியாக மாற்றுகிறது என்பதை அபாரமான திரைக்கதையால் சொன்ன படமே ‘ஜோக்கர். படத்தில் பீனிக்ஸுன் சிரிப்பும் மிகப்பிரபலம்.
மேலும், இப்படத்தில் நாயகனாக நடித்து மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய ஜாக்குவன் பீனிக்ஸுக்கு ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.
இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதன் டிரைலர் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...