மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஜி.வி.பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவி அஸ்வின் ஜி.வி.பிரகாஷ் பட டிரைலரை வெளியிடவிருக்கிறார்.

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 9:39 am

DIN

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். பல அற்புதமான பாடல்களை இசையமைத்தவர் தற்போது நடிகராகவும் 24 படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்த திவ்யபாரதி, ஜிவி 25 படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

டியர் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்ல இந்தப் படத்துக்கு இசையமைத்தும் இருக்கிறார். இந்தப் படத்தினை அனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படம் வரும் ஏப்.11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு ‘தலவலி’ எனும் பாடல் வெளியாகி கசனம் பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்தப் படத்தின் டிரைலரை வெளியிடவிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.