சினிமாவை விட வாழ்க்கையை ரசிக்க விரும்புகிறேன்: திருமணத்துக்குப் பிறகு டாப்ஸியின் முதல் நேர்காணல்!

பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி திருமணத்துக்குப் பிறகு முதன்முறையாக நேர்காணலில் பேசியிருக்கிறார்.
சினிமாவை விட வாழ்க்கையை ரசிக்க விரும்புகிறேன்: திருமணத்துக்குப் பிறகு டாப்ஸியின் முதல் நேர்காணல்!

பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி திருமணத்துக்குப் பிறகு முதன்முறையாக நேர்காணலில் பேசியிருக்கிறார்.

36 வயதான டாப்ஸி தமிழில், ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.

அனுராக் கஷ்யப் இயக்கத்தில் உருவான ‘டோபாரா’படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டன்கி’ திரைப்படம் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்றன.

நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார் டாப்ஸி. தற்போது 3 ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார்.

சினிமாவை விட வாழ்க்கையை ரசிக்க விரும்புகிறேன்: திருமணத்துக்குப் பிறகு டாப்ஸியின் முதல் நேர்காணல்!
ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அவமானமாக இருக்கிறது: ரிக்கி பாண்டிங் வருத்தம்!

டென்மார்க்கைச் சேர்ந்த மதியாஸ் போ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு முதன்முறையாக ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியளித்திருக்கிறார். அதில் டாப்ஸி கூறியதாவது:

எனது நேரத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் இனிமேல் எனது திரைப்படங்களை (தொழிலை) மாற்றியமைக்க இருக்கிறேன். ஒரு படத்தினை தேர்வு செய்தால் அது நிச்சயமாக எனது நேரத்துக்கு முக்கியத்துவம் உள்ளதாக இருக்க வேண்டும். ஏனெனில் எனது வாழ்க்கையை சினிமாவை தாண்டி ரசிக்க விரும்புகிறேன். இரண்டாவது காரணம் எனது திரைப்படங்கள் எனது இயல்புக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

சினிமாவை விட வாழ்க்கையை ரசிக்க விரும்புகிறேன்: திருமணத்துக்குப் பிறகு டாப்ஸியின் முதல் நேர்காணல்!
பேரழகி சான்யா மல்ஹோத்ரா...!
காதலருடன் டாப்ஸி.
காதலருடன் டாப்ஸி.

இனி எனது சினிமாக்களை நினைத்து பெருமைப்பட வேண்டும். அதனால், இனிமேல் எனக்கு பிடிக்காத படங்களில் நடித்து எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

எப்போதும் நம்முடன் நம்மை விடவும் கீழாக, மேலாக என பல நபர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு உயர்வான இடத்துக்கு செல்ல வேண்டுமென அவசரம் இருக்கும். ஆனால், உயர்வான இடம் என்ற ஒன்று இல்லை என நமக்கு தெரிவதில்லை. நான் எனது தொழிலை விடவும் வாழ்க்கையை நேசிக்க விரும்புகிறேன். மிகப் பெரிய ஆளாக ஆகாவிட்டாலும் பரவாயில்லை, எனக்கு இது போதுமானதாக இருக்கிறது. எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் நான், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென நினைக்கிறேன். உங்களது மூளையில் உங்களைப் பற்றி யோசிக்கும் அளவுக்கு நீங்கள் முக்கியமானவர் இல்லை எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com