
'மதுபான கடை' திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கமலக்கண்ணன். தற்போது நடிகர் காளி வெங்கட்டை முதன்மை கதாபாத்திரமாக வைத்து குரங்கு பெடல் எனும் புதிய படத்தினை இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
மதுபான கடைகளில் நடைபெறும் அரசியலை இயக்குநர் கமலக்கண்ணன் அளவுக்கு இதுவரை யாரும் தமிழில் பேசியதில்லை என நல்ல விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மதுபானக் கடை படத்துக்குப் பிறகு ஆண்ட்ரியா, சிபி சத்யராஜ் நடிப்பில் வட்டம் படம் ஹாட்ஸ்டாரில் வெளியானது. குரங்கு பெடல் படத்தினை யுவிடபிள்யூ தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வெளியான அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இவர் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் படங்களில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் புரோடக்ஷன் என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.
இந்நிறுவனத்தின் மூலம் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் குரங்கு பெடல் படத்தினை வெளியிடுகிறார். இதன் டீசர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில் இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு படம் திரையரங்குகளில் வெளியாகுமென போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.