இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி, காலா என்ற இரண்டு வெற்றி படங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். தற்போது ரஜினி ஜெய்பீம் இயக்குநருடன் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் பா. ரஞ்சித் நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தினை முடித்துவிட்டு ரிலீஸுக்கு காத்திருக்கிறார்.
தனது படங்களின் மூலம் தலித் அரசியலை முன்வைக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் வானம் கலைத்திருவிழா என்ற கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு விடியோவினால் பா.ரஞ்சித் பேசுபொருளாகியுள்ளார். அந்த விடியோவில், “பா.ரஞ்சித் தனது தலித் அரசியலை நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து பேச வைத்திருக்கிறார். நடிகர் ரஜினிக்கு அந்த அரசியல் புரிந்ததா இல்லையா என்றுக் கூட தெரியவில்லை. ஆனால் ரஜினி வாயால் அதை பேச வைத்தது மிகவும் முக்கியமானதாக பார்க்கிறேன்” என தேசிய விருது பெற்ற மலையாள இயக்குநர் டாக்டர். பிஜு சென்னையில் நடைபெற்ற பிகே ரோஷி திரைப்பட விழாவில் பேசினார்.
இப்படி பேசும்போது இயக்குநர் ரஞ்சித் சிரித்துக்கொண்டிருப்பார். அதனால் புண்பட்ட ரஜினி ரசிகர்கள் இயக்குநர் பா. ரஞ்சித்தை விமர்சித்து வருகிறார்கள்.
I am boycotting all Pa.Ranjith @beemji movie until he apologizes and give a clear statement on Thalaivarâs gratitude towards him. Period.
— Senthil Kumar (@Senthil_Dhana) April 13, 2024
If he feels for the pain of suppressed then it is no less pain for a Rajini fan on his act.ð #நனà¯à®±à®¿à®à¯à®à¯à®_à®°à®à¯à®à®¿à®¤à¯pic.twitter.com/wRoRCYex1g
பா.ரஞ்சித் இதற்காக விளக்கமளித்து மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் நன்றிகெட்ட ரஞ்சித் என ஹேஷ்டேக்கினை எக்ஸில் வைரலாக்கியும் வருகிறார்கள்.
Dinamani
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.












