புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

மீனாட்சி பொண்ணுங்க தொடரின் நாயகி செளந்தர்யா ரெட்டி பகிந்துள்ள புகைப்படம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டாவுடன் செளந்தர்யா ரெட்டி
விஜய் தேவரகொண்டாவுடன் செளந்தர்யா ரெட்டி

மீனாட்சி பொண்ணுங்க தொடரின் நாயகி செளந்தர்யா ரெட்டி பகிந்துள்ள புகைப்படம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்தேவரகொண்டாவுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை செளந்தர்யா ரெட்டி பகிர்ந்துள்ளார். அப்படத்துடன் ரெட்டி ஸ்கொயர் என்று பதிவிட்டுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையேயும் நடிகர் விஜய் தேவரகொண்டா பிரபலமானார். அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து அவர் நடித்த பல தெலுங்கு படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் நோட்டா என்ற படத்திலும் நடித்திருந்தார்.

விஜய் தேவரகொண்டாவுடன் செளந்தர்யா ரெட்டி
காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!
செளந்தர்யா ரெட்டி
செளந்தர்யா ரெட்டி

சின்னத்திரை நடிகை செளந்தர்யா ரெட்டியும் தெலுங்கில் பாடமதி சந்தியாராகம் என்ற தொடரில் நடிததன் மூலம் மிகவும் பிரபலானவர். தற்போது தமிழில் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகருடன் தெலுங்கு தொடரின் முன்னணி நடிகை செளந்தர்யா ரெட்டி இருப்பதை போன்ற புகைப்படம் குறித்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சின்னத்திரையில் தனது நடிப்புக்காக விருதுகளை வாங்கிய செளந்தர்யா, விஜய் தேவரகொண்டாவுடன் புதிய படத்தில் நடிக்கவுள்ளாரா என்பதை போன்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தெலுங்கு மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்ட செளந்தர்யா, தொலைக்காட்சி படப்பிடிப்பின்போதும் அப்படத்தை எடுத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com