காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

திருமண மேடையில் தாலி கட்டும் நிகழ்வில் இருவரும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொண்ட விடியோ வைரல்.
காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

சின்னத்திரை நடிகை தர்ஷனா அசோகன் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துகொண்டார். அவரின் திருமண புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. சின்னத்திரை பிரலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கனா தொடரில் நாயகியாக நடித்தவர் நடிகை தர்ஷனா அசோகன். கனா தொடரில் இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்கு கிடைத்து வந்த நிலையில், சமீபத்தில் அத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!
புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் துணிஷா என்ற புதுமுக நடிகை நடித்து வருகிறார். கனா தொடரிலிருந்து விலகியதற்கு பலர் பல்வேறு காரணங்களை தகவல்களாக கூறி வந்தனர். இந்நிலையில், திருமணத்திற்காக அவர் விலகினாரா என்றும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை தர்ஷனா அபிஷேக் என்பவரை காதலித்து வந்தார். அவருடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுடனும் தனது காதலை பகிர்ந்துகொண்டார். தற்போது தனது காதலனை நடிகை தர்ஷனா திருமணம் செய்துகொண்டார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. திருமண மேடையில் தாலி கட்டும் நிகழ்வில் இருவரும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com