மறுவெளியீட்டில் புதிய சாதனை படைத்த ‘கில்லி’ திரைப்படம்!

நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான கில்லி படத்தின் மறுவெளியீட்டில் புதிய சாதனை படைத்துள்ளது.
மறுவெளியீட்டில் புதிய சாதனை படைத்த ‘கில்லி’ திரைப்படம்!
படம்: சக்தி ஃபிலிம் பேக்டரி

நடிகர் விஜய்யின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக அமைந்தது கில்லி. இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் உருவான இப்படம் 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.

தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான கில்லி, ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்து விஜய்யின் மார்கெட்டை அதிகரித்தது.

ஒக்கடுவிலும், கில்லியிலும் வில்லனாக நடித்து அசத்திய பிரகாஷ் ராஜ், ‘ஹாய் செல்லம்’ என்கிற வசனத்தைப் பேசியது இந்தப் படத்தில்தான். கில்லி திரைப்படம் 4கே டிஜிட்டல் தரத்தில் மீண்டும் திரைக்கு வருகிறது. சக்தி ஃபிலிம் பேக்டரி இதனை வெளியிடுகிறது.

மறுவெளியீட்டில் புதிய சாதனை படைத்த ‘கில்லி’ திரைப்படம்!
ஓடிடியில் ‘ஃபேமிலி ஸ்டார்’ எப்போது?

இப்படத்துக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருப்பார். இப்படத்துக்கு இவர் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆனது. அதிலும் அப்படிபோடு, அர்ஜுனரு வில்லு ஆகிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் அதிகம் கேட்கப்படுகிறது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ரோகிணி திரையரங்க உரிமையாளர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தாண்டின் ரீ ரிலீஸ் படங்களில் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்ட படமாக கில்லி இருக்கிறது. இன்னும் 3 நாள்கள்தான் இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

மறுவெளியீட்டில் புதிய சாதனை படைத்த ‘கில்லி’ திரைப்படம்!
பெண்களின் முன்னேற்றத்துக்காக ‘ஆதி சக்தி’: நடிகை சம்யுக்தா அறிவிப்பு!

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் இன்னும் ஒரு படத்துடன் ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com