பெண்களின் முன்னேற்றத்துக்காக ‘ஆதி சக்தி’: நடிகை சம்யுக்தா அறிவிப்பு!

பிரபல நடிகை சம்யுக்தா பெண்களின் முன்னேற்றதுக்காக ஆதி சக்தி எனும் புதிய அமைப்பினை துவங்கியுள்ளார்.
பெண்களின் முன்னேற்றத்துக்காக ‘ஆதி சக்தி’: நடிகை சம்யுக்தா அறிவிப்பு!

நடிகை சம்யுக்தா மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் களரி படத்தில் அறிமுகமாயிருந்தார். 

நடிகர் தனுஷ் உடன் நடித்த வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

பெண்களின் முன்னேற்றத்துக்காக ‘ஆதி சக்தி’: நடிகை சம்யுக்தா அறிவிப்பு!
‘விக்ரம் 62’ படத் தலைப்பு டீசர்!

வாத்தி படத்தில் நடிகை சம்யுக்தா மிகவும் கவனம் பெற்றார். தெலுங்கில் இவர் நடித்த விரூபாக்‌ஷா விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் ராம நவமியை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகை சம்யுக்தா.

அந்தப் பதிவில் நடிகை சம்யுக்தா , “புனிதமான ராம நவமி நாளில் நாம் அனைவரும் ஆழமான நன்றியுணர்வுடன் ஒன்றிணைகிறோம். இந்த ஆதி சக்தி பிறந்த நாளில் பெண்களின் முன்னேற்றதுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான முயற்சியாக இதைத் தொடங்குகிறேன். இது மேலும் சிறக்க உங்களது ஆதரவினையும் ஆசிர்வாதத்தினையும் வேண்டுகிறேன்.

இந்தப் புனிதமான பயணம் குறித்த கூடுதல் தவலை விரைவில் பகிர்வேன்" எனக் கூறியுள்ளார்.

பெண்களின் முன்னேற்றத்துக்காக ‘ஆதி சக்தி’: நடிகை சம்யுக்தா அறிவிப்பு!
ரசிகர்களின் பாராட்டு மழையில் ‘பிரேமலு’ அமல் டேவிஸ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com