கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

கேன்ஸ் திரைப்பட விழாவில் உயர்ந்த விருதான பால்ம் டி ஓர் விருது முதன்முறையாக ஒரு அனிமேஷன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

கேன்ஸ் திரைப்பட விழாவில் உயர்ந்த விருதான பால்ம் டி ஓர் (தங்கப் பனை) விருது முதன்முறையாக ஒரு அனிமேஷன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பெர்லின், வெனிஸ், கேன்ஸ் என 3 முக்கியமான திரைப்பட விழாக்கள் இருக்கின்றன. இதில் சர்வதேச அளவில் மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் கேன்ஸ் திரைப்பட விழாவும் ஒன்று. இது பிரான்ஸில் வழங்கப்படுகிறது. 1946ஆம் ஆண்டு முதல் இந்த விழா நடைபெற்று வருகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!
செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

பாம் டி ஆர் எனப்படும் தங்கப் பனை விருதுதான் இந்த விழாவின் உயரிய விருது. இந்த விருது இதுவரை தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே ( பொதுவாக இயக்குநர்களுக்கு) வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதன்முறையாக ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவின் சார்பாக வாழ்நாள் சாதனை விருது ஜப்பானைச் சேர்ந்த அனிமேஷன் ஸ்டூடியோ கிப்லி ஸ்டூடியோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!
நடிகர் மோகன்லாலை சந்தித்த ‘காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி!

இந்த ஸ்டூடியோவின் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் நமது கற்பனைத் திறனை செழுமைப்படுத்தும் விதமாகவும், உலகம் அதிர்கிற வகையிலும், கதை சொல்லல் பாணியில் கவரும் தன்மையுடையதாகவும் அமைந்துள்ளது.

ஜப்பானின் அனிமேஷனை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றும் கலைத்தன்மை பெற்றுள்ளதற்காகவும் இந்த விருது வழங்கப்படுவதாக விழா குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com