செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

நடிகை ஆலியா பட் உலகின் செல்வாக்கு முகுந்த 100 நபர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!
Published on
Updated on
2 min read

2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமான நடிகை ஆலியா பட் கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார். அவரது நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன.

ஹாலிவுட்டில் ஆர்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்திவருகிறார் ஆலியா பட். தற்போது, ஜிக்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற ஆலியா பட்.
தேசிய விருது பெற்ற ஆலியா பட்.

நடிகர் ரன்பீர் கபூரை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ராஹா எனும் பெண் குழந்தை கடந்தாண்டு டிசம்பரில் பிறந்தது.

சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் கணவர் ரன்பீருடன் லவ் அன்ட் வார் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு தோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலை பிரபல ஆங்கில பத்திரிக்கையான டைம்ஸ் வெளியிடும். இதில் சர்வதேச அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள், பிரபலங்கள் இடம்பெறுவார்கள். சினிமா, அரசியல், விளையாட்டு, மக்கள் பணி ஆகிய பல்வேறு துறைகளில் இருந்து 100 நபர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்த வகையில் இந்த வருடமும் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் நடிகை ஆலியா பட் இடம்பெற்றுள்ளார்.

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!
ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

ஆலியா பட் குறித்து டைம்ஸ் இதழ் கூறியிருப்பதாவது:

மற்றவர்கள் எதிர்த்து நிற்க முடியாத அளவுக்கு ஆலியா பட் திறமைசாலி. அவர் உலகின் சிறந்த நடிகை. பத்தாண்டுகளாக இந்திய சினிமாவில் அவரது பங்களிப்பு குறித்து பிரமிக்கிறேன். நேர்மையான தொழில் செய்பவராகவும் ஏழைகளுக்கு உதவுபவராகவும் இருக்கிறார்.

ஹார்ட் ஆஃப் ஸ்டோன் எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்கும்போது ஆலியாவை சந்தித்தேன். அவரது புகழைத் தாண்டி தன்னொதுக்கமான (செல்ப்- எபாசிங்) நகைச்சுவையான நபராக இருந்தார். அவரது பணியில் கவனமாகவும் புதியதாக ஒன்றை செய்ய விரும்புவதும் புதிய சிந்தனைகளுக்கு இடம் அளிப்பவராகவும் இருந்தார். படத்தின் கடைசி கட்டத்தில் அவராகவே மெறுகேற்றி நடித்த எமோஷ்னல் காட்சிகள் பிடித்திருந்தன.

ஆலியாவின் திறமை, தனித்துவம், ஒன்றினை புரிந்து கொள்ளும் விதம் என கலவையான சக்தியினை பெற்றுள்ளார். நடிகையாக மின்னிடுகின்றார்; மனிதராக மற்றவர்களை பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறார். மேலும் அவரது படைப்புதிறன் அவரை சர்வதேச நட்சத்திரமாக மாற்றுகிறது எனக் கூறியுள்ளார்.

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!
பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

இதற்கு நடிகை ஆலியா பட், “டைம்ஸின் 100 பேரில் நானும் ஒருவராக இருப்பது மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கிறது. என்னைப் பற்றிய கனிவான வார்த்தைகளுக்கு நன்றி” எனவும் கூறியுள்ளார்.

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!
ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com