ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

நடிகரும் த.வெ.க. கட்சியின் தலைவருமான விஜய் ரஷியாவிலிருந்து இன்றிரவு சென்னை திரும்புகிறார்.
ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது. இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!
பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் இன்றிரவு சென்னை வரவிருக்கிறார். கோட் படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிவடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!
ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை உருவாக்கியுள்ள விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

'விஜய் 69' படத்தோடு சினிமாவில் நடிப்பதை முழுவதுமாக கைவிடுவதாக நடிகர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com