

'பசி' படத்தின் இயக்குநர் துரை உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இவருக்கு வயது 84.
தமிழ்த் திரையுலகின் மூத்தக் கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் கலைமாமணி துரை, உடல்நலக் குறைவு காரணமாக காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இயக்குநர் துரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய ‘பசி’ திரைப்படத்திற்கு 1979 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும் தமிழக அரசின் விருதுகளும், ஃபிலிம்பேர் விருதுகளும் இப்படத்துக்கு குவிந்தன.
துரை இயக்கிய அவளும் பெண்தானே, ஆசை 60 நாள், பாவத்தின் சம்பளம், ஒரு வீடு ஒரு உலகம், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவைகளாகும்.
இவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காலமானாா் கே.வி.ராமசாமி

இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!

தவறாக வெளியான காலமானார் செய்தி! நோபல் பரிசுக்கு வழிவகுத்ததா?
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

