’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

நடிகர் ஃபஹத் ஃபாசில் சினிமா மற்றும் தன் நடிப்பு குறித்து பேசியுள்ளார்.
’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

நடிகர் ஃபஹத் ஃபாசில் மலையாள சினிமாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தியளவில் கவனம் பெற்ற நடிகராக இருக்கிறார். ஃபஹத் நடிக்கும் ஒவ்வொரு படத்தில் அவரது நடிப்பு குறித்த விவாதங்களே நிகழும்.

சமீபத்தில் வெளியான, ஃபஹத்தின் ஆவேஷம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் வெற்றி பெற்றதுடன் ஃபஹத்தின் நடிப்பும் பாராட்டுக்களைப் பெற்றது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஃபஹத் ஃபாசில், “ மக்கள் ஒரு சினிமாவைப் பற்றி திரையரங்கிலோ அல்லது வீட்டிற்கு வரும் வழியிலோ மட்டும் பேசினால்போதும். உணவு மேசை வரை அதைக் கொண்டு வர வேண்டாம் என நினைக்கிறேன். வாழ்க்கையில், சினிமாவைவிட செய்வதற்கு நிறைய இருக்கிறது.

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்
ஆவேஷம் ரூ.100 கோடி வசூல்!

ஒரு நடிகனாக இருப்பதைவிட தயாரிப்பாளராக இருப்பதே எனக்கு பிடித்திருக்கிறது. காரணம், ஒரு நடிகனாக எனக்கு நிறைய எல்லைகள் உண்டு. கேமரா கோணத்திலிருந்து உடை வரை அதிகப்படியான ஆள்களை சார்ந்திருக்க வேண்டும். ஆனால், தயாரிப்பாளராக எனக்கு முழு சுதந்திரம் உண்டு. என்ன வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். நடிகனாக இருந்தாலும் பிறர் என்னைப் பற்றி பேசுவதையோ கொண்டாடுவதையோ நான் விரும்பவில்லை. என் படங்கள் பிடித்திருந்தால் பாருங்கள். பிடிக்கவில்லையென்றால் தவிர்த்து விடுங்கள். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்
தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

மஞ்ஞுமல் பாய்ஸ், பிரேமலு, பிரம்மயுகம், ஆடுஜீவிதம், ஆவேஷம், வருஷங்களுக்கு ஷேஷம் படங்கள் வசூலில் பெரிய வெற்றி பெற்றதற்கு முதன்மையான காரணம் இவை எல்லாம் நல்ல படங்கள் என்பதால்தான். ஒவ்வொன்றும் வேறுவேறு பாணிகளைக் கொண்ட திரைப்படங்கள். ஆனால், ரசிகர்கள் அதை வரவேற்கிறார்கள். அவர்கள் வித்தியாசமான முயற்சிகளையும் எதிர்பார்க்கின்றனர்.

என் நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னேன், “அடுத்த 5 ஆண்டுகளில் மலையாள சினிமாவில் என்ன வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். பல பரிசோதனை படங்களை எடுத்தாலும் அதற்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுதான் முக்கியமான காலகட்டம்.”

திரைப்படங்களை இயக்கும் எண்ணம் இல்லை. ஆனால், என்னால் எழுத முடியும் என ஷியாம் புஷ்கரன் சொல்வார். பார்க்கலாம்.” எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com