தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

நடிகை அபர்ணா தாஸ் பிரபல நடிகரைத் திருமணம் செய்துகொண்டார்.
தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

ஞான் பிரகாஷன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். அதன்பின், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்கப்பட்டார்.

தொடர்ந்து, நடிகர் கவின் நடித்த ‘டாடா’ படத்தின் நாயகியாக நடித்தவருக்கு பெரிய வரவேற்புக் கிடைத்தது. மலையாளியாக இருந்தாலும் தோற்றத்தில் தமிழ்ப் பெண்போலவே இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடும் நாயகி.

தற்போது, மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் தீபக் பரம்பொலுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. காதல் திருமணம் செய்துகொண்ட இந்த இணைக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com