கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

கில்லி திரைப்படம் மறுவெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?
Published on
Updated on
1 min read

நடிகர் விஜய்யின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக அமைந்த படம் கில்லி. இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய் - த்ரிஷா நடிப்பில் உருவான இப்படம் 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.

இப்படம் ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்ததோடு விஜய்யின் மார்கெட்டையும் உயர்த்தியது.

அதிகரித்துவரும் ரீ ரிலீஸ் டிரெண்டில் கில்லியும் களமிறங்கியுள்ளது. ரசிகர்களிடம் சாதாரணமாக ஆதரவைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மறுவெளியீட்டிலும் வசூலில் அசத்தி வருகிறது கில்லி.

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?
ரீமேக்கான ரீமேக்கின் கதை!

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கில்லி இதுவரை ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியளவில், மறுவெளியீடான திரைப்படம் இவ்வளவு பெரிய தொகையை வசூலிப்பது இதுவே முதல் முறை!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?
குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com