மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

நடிகர் மம்மூட்டியை பாலிவுட் நடிகை வித்யா பாலன் புகழ்ந்து பேசியுள்ளார்.
மம்மூட்டி  நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்' என்கிற படத்தை இயக்கினார்.

வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாலிவுட் நடிகை வித்யா பாலன் மம்மூட்டி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அதில், “காதல் தி கோர் படத்தில் மம்மூட்டி நடித்த கதாபாத்திரம்போல இங்குள்ள எந்த கான்களாலும் நடிக்க முடியாது. கேரளத்தில் இலக்கியம் படிக்கும் மக்கள் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் (மம்மூட்டி) செய்ததை குறைவாக மதிப்பிடவில்லை. அது கேரளத்தில் சற்று எளிதானதாக இருக்கிறது. அவருடைய சமூகத்தினை அது பிரதிபலிக்கிறது. அவர்கள் எல்லா படங்களுக்கும் திறந்த மனதுடன் இருக்கிறார்கள்.

மம்மூட்டி  நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!
‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

தென்னிந்திய நடிகர்களை விடவும் அவர்கள் சிறப்பாக போற்றுகிறார்கள். ஆண் நாயகர்களை வணங்குகிறார்கள். அதனால் அதை தாண்டி மம்மூட்டி செய்ததால் அவரை பாராட்ட வேண்டும். மம்மூட்டி தனது வழக்கமான ஆணாதிக்க பிம்பத்தை பாதிக்கும் என நினைக்கவில்லை. அவர் மிகவும் பாதுகாப்பான நடிகர்” என்று கூறினார்.

மம்மூட்டி  நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!
தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

மேலும், “மலையாள சினிமாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி இதில் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரித்தும் இருக்கிறார். இதைவிடவும் மிகப்பெரிய ஆதரவு தன்பாலினத்தவர்களுக்கு இருக்குமா எனத் தெரியவில்லை. துரதிஷ்டவசமாக எந்த ஹிந்தி நடிகரும் காதல் தி கோர் படத்தினை போல் இங்கு எடுக்கமாட்டார்கள்” என துல்கர் சல்மானுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறினார்.

இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com