
ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு நடிகை சமந்தா ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியில் இறுதிக்கு முன்னேறியிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு இன்று அறிவித்தது.
இதையடுத்து, அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல தரப்பினர் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், நடிகை சமந்தாவும் இன்ஸ்டாகிராமில் ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
சமந்தா வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“சில நேரங்களில், மிகவும் உறுதித்தன்மை வாய்ந்தவர்களுக்கே கடினமான தடைகள் வரும். நீங்கள் தனி நபர் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு மேல் உள்ள சக்தி அனைத்தையும் பார்த்துக் கொண்டுள்ளது.
மிகவும் கடினமான சூழலில் துணிச்சலாக நிற்கும் உங்களின் திறன் போற்றத்தக்கது. உங்களின் ஏற்ற இறக்கங்களில் நாங்கள் உடன் நிற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் களம்கண்ட வினேஷ் போகத், செவ்வாய் இரவு 2 கிலோ கூடுதல் எடையுடன் இருந்துள்ளார்.
இதனால், இரவு முழுக்க கடும் பயிற்சி மேற்கொண்ட போதும், 100 கிராம் அதிக எடை இருந்ததால் வினேஷ் போகத்தை தகுதிநீக்கம் செய்து ஒலிம்பிக் அமைப்பு உத்தரவிட்டது.
வினேஷ் போகத்துக்கு நாட்டின் பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி வரும் நிலையில், நீர் சத்து குறைந்தததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.