
நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021இல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.
சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் லண்டன் ஹோட்டலில் ஒன்றாக இருந்த புகைப்படம் இணையத்தில் கசிந்து பேசு பொருளாகின.
தொடர்ந்து, இருவரும் ஒரே இடத்தில் எடுத்துக் கொண்ட தனித்தனிப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது திரையுலகில் மேலும் பரபரப்பை கிளப்பினர்.
ஆனால், இதுகுறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு இருவரும் தொடர்ந்து பதிலளிக்க மறுத்து வந்தனர்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் இல்லத்தில் இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும், இருவீட்டார் மட்டும் கலந்து கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனாவே அவர்களின் திருமணம் குறித்து அறிவிப்பார் என்று தெரிகின்றது.
அதனைத் தொடர்ந்து, இருவரும் தங்களின் சமூக வலைதளங்களில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.