
தங்கலான் திரைப்படம் பல விருதுகளைப் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.
நடிகர் விக்ரம் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதனால், இதன் புரோமோஷன் நிகழ்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் இணைந்து பல நேர்காணல்களில் கலந்துகொள்கின்றனர்.
கோலார் தங்கச் சுரங்கத்தில் எப்படி தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது, சுரங்கத்தொழிலுக்காக மக்கள் அடிமைப்படுத்தப்பட்டது குறித்த படமாக இது உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.
மேலும், நடிகர் விக்ரமின் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் பேசப்படும் எனத் தெரிகிறது. படத்தின் தயாரிப்பில் இருந்த தனஞ்செயன் இப்படம் ஆஸ்கர் வரை செல்லும் எனக் கூறியிருக்கிறார்.
முக்கியமாக, தேசியளவிலும் பல உலகத்திரைப்பட விழாவுக்கும் இப்படத்தை அனுப்பும் முடிவில் இருப்பதால் தங்கலான் பல விருதுகளைக் குவிக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர் படக்குழுவினர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.