தீவிரமடையும் இளையராஜா பயோபிக் பணிகள்!

தீவிரமடையும் இளையராஜா பயோபிக் பணிகள்!
Published on
Updated on
1 min read

இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் திரைப்படத்தின் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார். 

இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தையும் பெறுகின்றன. சமீப காலமாக வெளியாகும் தமிழ்ப் படங்களில் இளையராஜாவின் பின்னணி இசைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ் இதில் நாயகனக நடிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கான திரைக்கதை நடிகர் கமல்ஹாசன் எழுதுகிறார்.

தீவிரமடையும் இளையராஜா பயோபிக் பணிகள்!
4 முறை பேச்சுவார்த்தை... மாரி செல்வராஜ் கதையைக் கேட்டு விஜய் சொன்ன பதில்!

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். ரத்தம் தெறிக்கும் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இளையராஜா பயோபிக்கினை எப்படி இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

தற்போது, நடிகர் தனுஷ் சேகர் கமூலா இயக்கும் குபேரன் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து, ஆனந்த் எல்.ராய் இயக்கும் பாலிவுட் படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார்.

இது முடிந்த பின், இளையராஜாவின் பயோபிக் கதையில் நடிப்பார் எனத் தெரிகிறது. அதற்குள், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்திற்கான கலை மற்றும் இசைப்பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

செட் பணிகள் குறித்து ஆலோசிக்கும் இளையராஜா, அருண் மாதேஸ்வரன்.
செட் பணிகள் குறித்து ஆலோசிக்கும் இளையராஜா, அருண் மாதேஸ்வரன்.

பண்ணைபுரத்தில் இளையராஜாவின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதற்காக 1950-களின் பண்ணைபுரத்தை செட் மூலம் அமைக்க அருண் மாதேஸ்வரன் முடிவு செய்துள்ளார். அதற்காக, மாதிரி கிராம வடிவமைப்பை உருவாக்கி இளையராஜாவிடம் சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து வருகிறாராம். இருவரும் அடிக்கடி சந்தித்து படத்தில் என்னென்ன எப்படி இடம்பெற வேண்டும் என்பது குறித்து பேசி வருவதாகவும் தகவல்.

தீவிரமடையும் இளையராஜா பயோபிக் பணிகள்!
ராயன் வெற்றி... விருந்தளித்த தனுஷ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com