
இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் விஜய்யை சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ், மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்குப் பின் நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார். இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் - மாரி செல்வராஜ் கூட்டணியில் படம் உருவாக உள்ளதாகக் கூறப்பட்டது.
தற்போது, இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ் படத்தை இயக்கியதும் நடிகர் கார்த்தியை வைத்து படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனக்கென அரசியல் பார்வை கொண்ட மாரி செல்வராஜ், தொடர்ந்து தன் படங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் துயரை பதிவு செய்பவர். அதேநேரம், தன்னை தீவிரமான விஜய் ரசிகர் என்றும் கூறினார். விஜய்யின் படங்களை முதல்நாள் முதல் காட்சியிலேயே பார்க்கும் பழக்கம் இருந்தது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில், ”இதுவரை நடிகர் விஜய்யை 4 முறை நேரில் சந்தித்து சினிமா கதைகளுடன் என் சொத்த வாழ்க்கையில் நடந்த பல விசயங்களை அவரிடம் கூறினேன். என் கதைகளைக் கேட்டவர், இந்தக் கதைகள் எனக்கு சரியாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஒரு ரசிகராக எனக்கு ஒரு கதையை எழுதுங்கள் நான் நடிக்கிறேன் என்றார்.” என மாரி செல்வராஜ் வொஜய் உடனான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
மேலும், விஜய் இவ்வளவு விரைவாக அரசியலுக்கு வருவார் என்பதை எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.