

கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘மாமனிதன்’ விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது.
தற்போது, சீனு ராமசாமி அடுத்ததாக ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கியுள்ளார்.
யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனி பெரியகுளம் பகுதியில் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இப்படம் செப்.20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.