
நடிகர் அஜித் குமாரை நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்தித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களிலும் தீவிரமாக நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் ஹைதராபாத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால், நாள் ஒன்றுக்கு 21 மணி நேரங்கள் அஜித் படப்பிடிப்பிலேயே இருக்கிறாராம்.
குட் பேட் அக்லி படப்பிடிப்பு இந்தாண்டு டிசம்பரில் முடியும் என்றும் அதன்பிறகு 2025, மே மாதம் வரை அஜித் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் படப்பிடிப்பில் சந்தித்துள்ளனர். சந்தித்த படத்தைப் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா, “பல ஆண்டுகளுக்குப் பின் என் வழிகாட்டி ஏகே (அஜித்குமார்) உடன் ஒரு மகிழ்ச்சியான தருணம்” எனப் பதிவிட்டுள்ளார்.
எஸ்.ஜே. சூர்யா இயக்கிய வாலி திரைப்படம் அஜித்குமாருக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.