எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா பிரிவார்கள்... சர்ச்சையில் ஜோதிடர்!

Published On :

நாக சைதன்யா - சோபிதா திருமண உறவு நிலைக்காது எனக் கூறிய ஜோதிடருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.

இருவரும் தங்களின் காதலை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அடுத்தாண்டு திருமணம் செய்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.

இந்த இணைக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திரத்தைச் சேர்ந்த ஜோதிடர் வேணு சுவாமி என்பவர், “நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் திருமணம் செய்துகொண்டாலும் சில ஆண்டுகளில் பிரிந்துவிடுவார்கள். அது, இன்னொரு பெண்ணால்தான் நிகழும்.” எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா.

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா.

இதனைத் தொடர்ந்து, அந்த ஜோதிடரைப் பலரும் கண்டித்து, தாக்கி பேசிவந்தனர். மேலும், தெலுங்கு திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் காவல்துறையில் இவர் மீது புகார் அளித்தது.

இதனால், வேணு சுவாமி மன்னிப்பு கேட்டு விடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “நான் ஜோசியத்தை கணித்துதான் சொன்னேன். யாரின் மனதையும் புண்படுத்தும் நோக்கில் கூறவில்லை. இனி நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஜோதிட கணிப்பை பொதுவெளியில் பகிரமாட்டேன்” என விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.