கல்கி 2898 ஏடி: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கி 2898 ஏடி போஸ்டர்

Published On :17 ஆகஸ்ட் 2024, 4:59 pm IST

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் கடந்த ஜூன் 27-ல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

உலகளவில் 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் ஆக.22ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.