
ஏழுமலை 2-ல் மருமகனை நாயகனாக்கி அர்ஜுன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் இயக்கி, நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏழுமலை. இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக சிம்ரன், மும்தாஜ் ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன.
தற்போது இந்த படத்தின் 2 பாகத்தை அர்ஜுன் எடுக்க முடிவு செய்துள்ளாராம். அதுவும் தனது மருமகன் உமாபதி ராமையாவை வைத்து இயக்கி தானே தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
நடிகர் அர்ஜுனின் மூத்த மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் அண்மையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. மேலும் அர்ஜுனின் மருமகன் உமாபதி ராமையாயும் வளர்ந்து வரும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.