3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

யோகி பாபுவின் புதிய பட போஸ்டரை வெளியிட்ட தியாகராஜன் குமாரராஜா!

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா யோகி பாபுவின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

யோகி பாபுவின் புதிய பட போஸ்டரை வெளியிட்ட தியாகராஜன் குமாரராஜா.

Published On :

ஆரண்ய காணடம் எனும் தனது முதல் படத்திலேயே தேசிய விருது வென்று கவனம் ஈர்த்தவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

பின்னர் பல ஆண்டுகள் கழித்து அவர் இயக்கிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

சமந்தா, ரம்யா கிருஷ்ணன், ஃபகத் ஃபாசில், மிஷ்கின் நடித்திருந்தார்கள். நடிகர் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனகாவும் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. இவர் நடிகை லட்சுமி மேனன் உடன் இணைந்து மலை என்ற படத்தில் நடிப்பதாக 2022இல் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் சுசீந்திரன், சீனுராமசாமி இடம் உதவி இயக்குநராக இருந்தவ ஐபி முருகேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கொங்கனி மலையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் லஷ்மி மேனன் மருத்துவராக நடித்துள்ளார். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடேட் இதனை தயாரிக்கிறது.

இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்தப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகுமெனவும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் காளி வெங்கட், சிங்கம் புலி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காளி வெங்கட் வில்லனாக நடித்துள்ளார். வில்லனாக இது அவருக்கு முதல்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பும் செய்துள்ளார்கள்.

மலை படத்தின் போஸ்டர்.

மலை படத்தின் போஸ்டர்.

இந்நிலையில் இதன் புதிய போஸ்டரை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா வெளியிட்டுள்ளார். உடன் பாடலாசிரியர் யுகபாரதியும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பாடலாசிரியர் யுகபாரதி உடன் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

பாடலாசிரியர் யுகபாரதி உடன் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.