திரைக் கதிர்
'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'பாக்கெட் நாவல்' திரைப்படம் உருவாகி வருகிறது.

'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'பாக்கெட் நாவல்' திரைப்படம் உருவாகி வருகிறது. இவர் இதற்கு முன்னதாக, 'மார்டன் லவ்: சென்னை' ஆந்தாலஜியில் ஒரு குறும்படத்தை இயக்கியிருந்தார்.
இயக்குநர் அண்ட்ரூ லூயிஸின் 'பாக்கெட் நாவல்' கதையை, தியாகராஜன் குமாரராஜா படமாக்கி வருகிறார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். படத்தில் நடித்தது குறித்தும், விஜய் சேதுபதியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் மாளவிகா மோகனன் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பத்தா' திரைப்பட வெற்றி விழாவில் விஜய் சேதுபதி பேசும்போது, 'இந்தப் படத்துக்குப் பிறகு பாலாஜி தரணிதரன் ஒரு பெரிய படம் பண்ணி நிறைய காசு சம்பாதிக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசை.
ஏன்னா, இத்தனை வருஷத்துல அவர் பண்ணியிருக்கிறதே நான்கு படங்கள்தான்.இதையெல்லாம் ஏதோ சோகக் கதைன்னு நினைத்துவிடாதீர்கள். கண்டிப்பாக அந்த மனுஷன் தன் வாழ்க்கையில ரொம்பவே திருப்தியாவும் சந்தோஷமாவும்தான் இருக்கிறார்.அவர் மிகப்பெரிய திறமைசாலி. இன்னும் முன்னுக்கு அவர் வரணும், பெரிய உயரங்களைத் தொட வேண்டும்' என்றார்.
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் காட்சியை கமலா திரையரங்கில், தன் தாய் சங்கீதா, தங்கை திவ்யா ஷாஷாவோடு இணைந்து ஜேசன் சஞ்சய் பார்த்தார். அப்போது அவர் 'கண்டிப்பாக நான் டைரக்ஷன் மட்டும்தான் பண்ணுவேன்னு கிடையாது. நடிப்புக்கு வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்' எனப் பேசியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

