அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

பாக்கெட் நாவல் படத்துக்கான டப்பிங் பணிகளைத் தொடங்கிய மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் பாக்கெட் நாவல் படத்திற்கான தனது டப்பிங் பணிகளைத் தொடங்கியது குறித்து...

Malavika Mohanan at dubbing sessions

டப்பிங் பணிகளில் மாளவிகா மோகனன் - படங்கள்: யூடியூப் / டைலர் டர்டன் & கினோ ஃபிஸ்ட்

Updated On :

தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள பாக்கெட் நாவல் படத்திற்கான தனது டப்பிங் பணிகளை நடிகை மாளவிகா மோகனன் தொடங்கியுள்ளார்.

தேசிய விருது வென்ற தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி.ஷெட்டி, கிஷோர் குமார், திலீப் சுப்பராயன் நடித்துள்ளார்கள்.

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

படம் பொங்கலை முன்னிட்டு ஜன.14ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனன் தனது டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளதாகப் படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.

முன்னதாக நாயகன் விஜய் சேதுபதியின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான பத்தா படமும் வெற்றியடைந்தது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் பாக்கெட் நாவல் படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

Summary

Thiagarajan Kumararaja’s Pocket Novel film Dubbing begins for Malavika Mohanan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.