
தனி உலகம்; வாழ்நாள் அனுபவம்... பாக்கெட் நாவல் படப்பிடிப்பு பற்றி மனம் திறந்த மாளவிகா!
நடிகை மாளவிகா மோகனன் பாக்கெட் நாவல் படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்தது பற்றி...

விஜய் சேதுபதி, தியாகராஜா குமாரராஜவுடன் மாளவிகா மோகனன். - படங்கள்: இன்ஸ்டா / மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் பாக்கெட் நாவல் திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களைப் பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில், “ சில படங்களை உருவாக்கும்போது அதுவே அதற்கென தனி உலகத்தையே உருவாக்கிவிடும்” எனப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய்சேதுபதி கூட்டணியில் பாக்கெட் நாவல் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் (TDKF) மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி வருவதால் படத்தின் மீதும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:
சில திரைப்படங்கள் உருவாக்கும்போது அந்தப் படம் அதற்கென தனியான ஒரு சிறிய உலகத்தையே உருவாக்கிவிடும். இதில் நானும் ஒரு பகுதியாக இருப்பதற்கு மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
வெறுமனே படங்களை இயக்குவதை விட அந்தப் படத்தின் ஊடாக நானும் எதாவது கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது. பல மாதங்கள் படக்குழுவுடன் செலவிடுகிறோம். அதில் பல மணி நேரங்கள் ஒவ்வொருவருடன் பகிர்ந்து கொள்கிறோம்.
ஒருவரையொருவர் தெரிந்துகொள்கிறோம், ஒன்றாகச் சாப்பிடுகிறோம், பல மணி நேரங்கள் பேசுகிறோம். அதில் சில நல்ல நாள்கள், மோசமான நாள்கள் இருக்கின்றன. உணர்ச்சி மிகுந்த நாள்களும் உணர்ச்சியற்ற நாள்களும் இருக்கின்றன. படக்குழுவே நமக்கு தூரத்தில் இருக்கும் இன்னொரு வீடாக மாறிவிடுகிறது.
என்னை மிகவும் கவனித்துக்கொண்ட நடிகர் விஜய் சேதுபதிக்கு மிக்க நன்றி. இந்தப் பயணத்தில் உங்களுடன் இருந்ததுபோல யாருடனும் இருக்கவில்லை. நீங்கள் மிகவும் உத்வேகம் அளித்தீர்கள். இனிமையாகப் பேசி, பாதுகாப்பான இடத்தை அளித்தீர்கள். எவ்வளவு கடினமான காட்சி, நீளமான காட்சியாக இருந்தாலும் என்னை ஆழ்ந்து நடிக்க உதவி செய்தீர்கள். பேட்ட, மாஸ்டர் படத்தில் நடித்தாலும் நாம் ஒன்றாக நடிக்கவில்லையே என்ற குறை இருந்து வந்தது. அது தற்போது முடிவுற்றுள்ளது.
டிகே - நீங்கள் மிகவும் கூலான பூனை. நீங்கள் இந்த உலகத்தையும் மனிதர்களையும் பார்க்கும் விதம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. உங்களுடன் வேலைப் பார்த்ததும் குறிப்பாக உங்களைத் தனிப்பட்ட முறையில் நண்பராகத் தெரிந்துகொண்டது வாழ்நாள் அனுபவம். கருணை மற்றும் வலுவான கருத்துகளை அழகாக இணைத்து இயக்கும் இயக்குநராக இருப்பது அற்புதமானது. இதை எப்படி செய்கிறீர்கள் என்பது வியக்க வைக்கிறது.
பாக்கெட் நாவல் - நீ வெறுமனே படம் மட்டுமே அல்ல. அதற்கும் மேலானது. விரைவில் திரையரங்கில் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.
Summary
Some films become a little world of their own Malavika Mohanan share shooting experience with pocket novel
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






