
மாளவிகா மோகனனுக்குப் பிடித்த 3 சிறந்த நடிகைகள் யார் தெரியுமா?
நடிகை மாளவிகா மோகனன் தனக்குப் பிடித்த சிறந்த 3 நடிகைகள் யார்யார் எனப் பகிர்ந்துள்ளார்.

மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் தனக்குப் பிடித்த சிறந்த 3 நடிகைகள் யார்யார் எனப் பகிர்ந்துள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படத்தில் அறிமுகமானார். இவர் மாஸ்டர், தங்கலான், ஹிருதயப்பூர்வம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் மாளவிகா, தற்போது சர்தார் 2, பாக்கெட் நாவல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சர்தார் 2 படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதில் உரையாடல் நடத்தி அதனை ஸ்டோரியாக பகிர்ந்திருந்தார்.
அதில், ஒரு ரசிகர் மாளவிகா மோகனனுக்குப் பிடித்த சிறந்த 3 தமிழ் நடிகைகள் யாரென்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மாளவிகா, “எனக்கு அமரன் படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அந்தப் படத்தின் உயிராக அவர் இருந்தார்.
அடுத்ததாக, எனக்கு த்ரிஷாவை பிடிக்கும். பொன்னியின் செல்வன் படத்தில் அவர் மிகவும் அழகாக இருப்பார். தனது கதாபாத்திரத்தில் வசீகரமாகவும் நடித்திருப்பார்.
அதேபோல, எனக்கு நித்யா மேனனை மிகவும் பிடிக்கும். அவர் நல்ல திறமைசாலி. அவர் பல மொழிகள் பேசுவார். பல மொழிப் படங்களில் நடிக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தில் அவருடைய கதாபாத்திரம் எனக்குப் பிடித்தமானது” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Actress Malavika Mohanan has shared the names of her three favorite actresses.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







