ஆஸ்கருக்குத் தேர்வாகியுள்ள இளையராஜாவின் கோந்தல் பட ரிலீஸ்: 6 நகரங்களில் சிறப்புக் காட்சிகள்!
இளையராஜா இசையமைத்த மராத்தி திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

கோந்தல் பட போஸ்டர், இளையராஜா. - படங்கள்: எக்ஸ் / பிஐபீ, இளையராஜா.
இளையராஜா இசையமைத்த மராத்திய திரைப்படம் ’கோந்தல்’ வெளியீட்டுக்கு முன்பாக முக்கியமான 6 நகரங்களில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுகின்றன.
ஆஸ்கர் விருது 2027 போட்டியில் பங்கேற்க இளையராஜா இசையமைத்த “கோந்தல்” எனும் திரைப்படம் இந்தியாவின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இளையராஜா இசையில், இயக்குநர் சந்தோஷ் தவக்கர் இயக்கத்தில் கோந்தல் என்ற மராத்திய திரைப்படம் உருவாகியுள்ளது.
மகாராஷ்டிர கிராமம் ஒன்றில் நடைபெறும் கோந்தல் எனும் பாரம்பரிய சடங்குகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு மகாராஷ்டிர திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் 56ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான ’வெள்ளி மயில்’ விருதைப் பெற்றது.
இந்தப் படம் ஆறு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், வரும் அக்.9ஆம் தேதி மும்பை, புணே, தில்லி, சென்னை, ஹைதராபாத், பெங்களூரில் ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் திரையிடப்படுகிறது.
இந்த சிறப்புத் திரையிடலுக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதன் வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படுமென படக்குழு கூறியுள்ளது.
ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ளதால் இந்தப் படம் மீது மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க ஹரிஷ்சந்திரச்சி ஃபேக்டரி (2009), ஸ்வாஸ் (2005), கோர்ட் (2015) ஆகிய 3 மராத்தி மொழிப் படங்கள் மட்டுமே இதுவரை தேர்வு பரிந்துரைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
India's Oscar entry 'Gondhal' sets previews in six cities ahead of six-language release
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




