மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு! மும்பையில் ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபியின் போராட்டம் தொடங்கியது! மதுராந்தகத்தில் தேநீர் கடையில் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!செய்யறிவால் பறிபோகும் மற்றும் அசைக்க முடியாத வேலைகள்! ஃபோர்டு நிர்வாகி தகவல்தொடர் விடுமுறை! மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்!இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்! பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!

மரகத நாணயம் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் ஆதி நடிப்பில் உருவாகும் மரகத நாணயம் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து...

The film crew of *Maragadha Naanayam 2*

மரகத நாணயம் 2 படப்பில் படக்குழுவினர் - படம்: எக்ஸ் / பேஸன் ஸ்டூடியோஸ்

Published On :

நடிகர் ஆதி நடிப்பில் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் உருவாகும் மரகத நாணயம் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.

கடந்த 2017-ல் நடிகர்கள் ஆதி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவான மரகத நாணயம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

முதல் பாகத்தில் வெற்றியைத் தொடர்ந்து, மரகத நாணயத்தின் 2 ஆம் பாகமும் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு திபு நினன தாமஸ் இசை, தீபக் மேனன், பிவி சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில், பேஸன் ஸ்டூடியோஸ் மற்றும் ஆக்ஸஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாம் பாகத்திலும் ஆதி, நிக்கி கல்ராணி உள்ளிடோர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் லெஜண்டரி நடிகர் சத்யராஜும் நடித்துள்ளார். முதல் பாகத்தில் பணியாற்றிய குழுவினரே இரண்டாம் பாகத்திலும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு விடியோ வெளியிட்டு உறுதிசெய்துள்ளது. போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Summary

Maragadha Naanayam 2 shooting has been wrapped up

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER