
முதல்வர் விஜய்யுடன் நடித்த போது த்ரிஷா அனுப்பிய அந்த குறுஞ்செய்தி: மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் த்ரிஷா குறித்து பேசியுள்ளார்...

நடிகை மாளவிகா மோகன் நடிகை த்ரிஷா குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது.
நடிகை நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, மாஸ்டர், தங்கலான், ஹிருதயப்பூர்வம் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். இதனால், மலையாளம், தமிழிலும் முன்னணி நடிகையாக பிரபலமடைந்துள்ளார்.
தற்போது, சர்தார் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை மாளவிகா மோகனன், “பேட்ட திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது நான் சினிமாவுக்கு புதிது. அப்போது, நடிகை த்ரிஷாவுடன் சில காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. அவர் மிகவும் இனிமையானவர். சூழலைப் புரிந்துகொண்டு என்னை இலகுவாக வைத்திருந்தார். நாங்கள் வாரணாசியில் படப்பிடிப்பில் இருந்தபோது இருவரும் இணைந்து வெளியே சென்று வருவோம். விஜய் சாருடன் மாஸ்டரில் நடிக்க ஒப்பந்தமானதும், த்ரிஷா, ‘ஹாய் பேபி. உன்னை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மிகப்பெரிய வாய்ப்பு. வாழ்த்துகள்’ எனக் குறுஞ்செய்தி அனுப்பினார். இதைச் சொல்வதற்கு நல்ல மனது வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
தனக்குப் பிடித்த சிறந்த நடிகைகளில் ஒருவர் த்ரிஷா என சில நாள்களுக்கு முன் மாளவிகா மோகனன் கூறியது குறிப்பிடத்தக்கது.
Actress Malavika Mohanan's comments about actress Trisha have garnered attention.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







