குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

25-வது முறை... ராமராஜன் திரைப்படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!

ராமராஜன் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்...

நடிகர் ராமராஜன், இசையமைப்பாளர் இளையராஜா

Published On :7 செப்டம்பர் 2026, 1:45 pm IST

நடிகர் ராமராஜன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.

எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் என தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்து பல உச்ச நட்சத்திர நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் நடிகர் ராமராஜன்.

ராமராஜன் படமென்றால் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளை மொய்த்த காலங்கள் உண்டு. ஆனால், சினிமாவின் நிலையற்ற தன்மை ராமராஜனையும் தாக்க, மெல்ல மெல்ல தன் வணிகத்தை இழந்தார். தோல்விப்படங்களால் பின்னடவைச் சந்தித்தவர் அரசியலில் கவனம் செலுத்தினார். 1998 மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், 2000-க்குப் பின் சினிமாவைவிட்டு விலகியிருந்தார்.

இறுதியாக 2024-ல் சாமானியன் என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில், நடிகர் ராமராஜன் கடவுள் தந்த பரிசு என்கிற புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இதனை அறிமுக இயக்குநர் காசிமாயன் என்பவர் இயக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளார். இது ராமராஜன் - இளையராஜா கூட்டணியின் 25-வது திரைப்படமாகும்.

Ilaiyaraaja is set to compose the music for the new film starring actor Ramarajan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.