FOLLOW US

ON GOOGLE DISCOVER

பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

இளையராஜா இசையமைப்பில் உருவாகும் தட்டுவண்டி!

இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்து...

News image

இளையராஜா, தட்டுவண்டி இயக்குநர் விஜயபாஸ்கர்

Updated On :20 ஜூலை 2026, 4:28 pm IST

இசையமைப்பாளர் இளையராஜா தட்டுவண்டி என்கிற திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தட்டுவண்டி'. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களிலும் திலீபன், மேரி பென்சி குளோரியா மற்றும் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

Story image

இப்படத்தை, 2021-ஆம் ஆண்டு இரண்டு மாநில அரசின் விருதுகளை வென்ற 'பில்டர் கோல்டு' திரைப்படத்தை இயக்கிய விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார். தனது முந்தைய படைப்பின் வெற்றியைத் தொடர்ந்து, வித்தியாசமான கதைக்களத்துடன் 'தட்டுவண்டி' திரைப்படத்தை ரசிகர்களுக்காக உருவாக்கியுள்ளார்.

படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் 'தட்டுவண்டி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Music composer Ilaiyaraaja is composing music for the film Thattuvandi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.