FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

சொந்த வாழ்வில் தாங்க முடியாத துயரம்... எஸ். ஜானகிக்கு இளையராஜா இரங்கல்!

பாடகி ஜானகியின் மறைவுக்கு இளையராஜா இரங்கல்...

News image

எஸ். ஜானகி, இளையராஜா

Updated On :12 ஜூலை 2026, 11:26 am IST

இசையமைப்பாளர் இளையராஜா மறைந்த பாடகி எஸ். ஜானகிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையிசையில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்த எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ஆயிரக்கணக்கான மிகச்சிறந்த பாடல்களைப் பாடிய குரல் என்பதால் பலரும் ஜானகியின் பாடலைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஜானகியம்மா காலமான செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தேன், அதிர்ச்சியாக இருந்தது. தன் சொந்த வாழ்வில் தாங்க முடியாத துயரங்களைத் தாங்கி வாழ்ந்து வந்தவர் ஜானகியம்மா. உலக மேதைகள் பலரின் வாழ்வும் துக்கமாகவே இருந்திருக்கிறது. திறமையில், தான் யாருக்கும் சளைத்தவர் இல்லை என நிரூபித்தவர். நான் எப்படி கடினமான உழைப்பாளியோ அதைவிட மேலான உழைப்பாளி ஜானகியம்மா. அவரது மறைவு இந்திய சங்கீத உலகிற்குப் பெரிய இழப்பு. ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Music composer Ilaiyaraaja has expressed his condolences over the passing of singer S. Janaki.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.